பட்டமளிப்பு விழா 2020 | Graduation Day 2020

பட்டமளிப்பு விழா 2020 வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பட்டமளிப்பு விழா (Graduation Day), வரும் சனிக்கிழமை, சூன் 13ம் தேதி, காலை 11மணி அளவில் நடைபெற உள்ளது. இணையம் மூலமாக நம் பள்ளியின் யூடியூப் சேனலில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் (Live) பார்க்க முடியும் - http://njvallalarpalli.org/live சென்னையில் இருந்து சிறப்பு விருந்தினராக முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் இணையம் மூலமாக கலந்து கொள்கிறார். அவருடைய தலைமையில் நம் பள்ளியின் ஐந்தாம் ஆண்டினை முன்னிட்டு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நம் பள்ளி ஆசிரியர்கள், இந்தப் பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். உங்கள் வீட்டில் இருந்தபடியே, நம் பள்ளியின் யூடியூப் சேனலில் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கிறோம்…