வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா
வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மூன்றாமாண்டு பொங்கல் விழா , பிப்ரவரி மாதம் 3 ம் தேதி சனிக்கிழமை கிரான்பெரி நகரில் நடைபெற்றது . பொங்கல் விழாவையொட்டிப் பல்வேறு போட்டிகள் குழந்தைகளுக்கு நடைபெற்றன . மாறுவேடப் போட்டி , மழலைப் பாடல்கள் போட்டி , செய்யுள் போட்டி , பழமொழிகள் போட்டி , நா நெகிழ் போட்டி , வினாடி வினா போன்ற பல போட்டிகள் நடைபெற்றன . காலை 11 மணி அளவில் விழா தொடங்கியது . விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சசிகுமார் ரெங்கநாதன் தலைமை வகித்தார் . விழாவினைப் பள்ளி ஆசிரியர்கள் ஹம்சா நாராயணன் , சமுத்திரா அய்யப்பன் தொகுத்து விழங்கினர் . பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் இந்து ...