வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மூன்றாமாண்டு பொங்கல் விழாபிப்ரவரி மாதம் 3ம் தேதி சனிக்கிழமை கிரான்பெரி நகரில் நடைபெற்றதுபொங்கல் விழாவையொட்டிப் பல்வேறு போட்டிகள் குழந்தைகளுக்கு நடைபெற்றனமாறுவேடப் போட்டிமழலைப் பாடல்கள் போட்டிசெய்யுள் போட்டிபழமொழிகள் போட்டிநா நெகிழ் போட்டிவினாடி வினா போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.  
காலை 11மணி அளவில் விழா தொடங்கியதுவிழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சசிகுமார் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.

விழாவினைப் பள்ளி ஆசிரியர்கள் ஹம்சா நாராயணன்சமுத்திரா அய்யப்பன் தொகுத்து விழங்கினர்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் இந்து வெங்கட் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்முதலில் குழந்தைகளின் மாறுவேடப் போட்டி
நடந்ததுதமிழகத்தைச் சார்ந்த பல்வேறு ஆளுமைகளின் வேடம் அணிந்துக் குழந்தைகள் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததுதொடர்ந்து பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்
சங்கீதா செல்வக்குமார் வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் தொடக்கமும்இலக்கும் என்பது குறித்துப் பேசினார்

அதைத் தொடர்ந்து ஆரம்ப நிலை மாணவர்கள் பங்குபெற்ற மழலைப் பாடல்கள் போட்டி நடைபெற்றதுகுழந்தைக் கவிஞர் அழவள்ளியப்பாவின் பாடல்கள்கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடல்களைக் குழந்தைகள் பாடினர்

வள்ளலாரின் வாழ்க்கைக் குறித்தும்செய்யுள் போட்டிகள் குறித்தும் பள்ளியின் தலைமையாசிரியர் சசிகுமார் ரெங்கநாதன் உரையாற்றினார்அதனைத் தொடர்ந்து விழாவில் முக்கியப் போட்டியாகச் செய்யுள் போட்டி நடந்ததுவள்ளலார் எழுதிய திருவருட்பாசங்கத்தமிழ் செய்யுள்களான புறநானூறுகுறுந்தொகைநீதி நூல்களான ஒளவையார் எழுதிய மூதுரைபக்தி இலக்கியங்களான திருவாசகம்தேவாரம்திருப்பாவைகிறுத்துவ இலக்கியமான தேம்பாவனிஐம்பெருங்காப்பியமான சிலப்பதிகாரம்புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல்கள் எனப் பல்வேறு தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடிய போட்டியாகத் தமிழ்ச் செய்யுள் போட்டி நடைபெற்றது

இதைத் தொடர்ந்து தமிழர்களின் மரபு வழி வந்த பழமொழிகள் போட்டி நடைபெற்றது.40க்கும் மேற்பட்ட பழமொழிகளைக் கூறிக் குழந்தைகள் வியக்க வைத்தனர்சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கு இணங்கப் பள்ளி மாணவர்களின் தமிழ்ப் பேச்சினை மேலும் செம்மைப்படுத்த தமிழ் நாநெகிழ் போட்டி
நடைபெற்றது
பள்ளி ஆசிரியர் பாண்டியராசன் அனைவரையும் கவரும் வகையில் நாட்டுப்புறப்பாடலைப் பாடினார்

இப்போட்டிகளில் 65க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்போட்டியில் வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டனஇறுதியாகப் பள்ளியின் மூத்த ஆசிரியர் ஶ்ரீலேகா ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவுபெற்றது


Comments

Popular posts from this blog

First day of School at West Windsor

WASC Accreditation

பட்டமளிப்பு விழா 2020 | Graduation Day 2020