நான்காம் ஆண்டு பொங்கல் விழா

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காம் ஆண்டு பொங்கல் விழா, மொழிச் சார்ந்த போட்டிகளைக் கொண்டதாக நாளை, சனிக்கிழமை, பிப்ரவரி 2ம் தேதி, நடக்க இருக்கிறது. அனைவரும் வருக. 
குறள் தேனீப் போட்டி, செய்யுள் போட்டி, ஆத்திச்சூடி போட்டி, எழுத்துத் தேனீப் போட்டி, பேச்சுப் போட்டி, மழலைப் பாடல்கள் போட்டி, மாறுவேடப் போட்டி என ஏழு போட்டிகள் நடைபெற உள்ளன.
விழாவிற்கு வரும் பொழுது கவனிக்க வேண்டியவை: 
  • போட்டியாளர்கள் அனைவரும் காலையில் தங்களை மறுபடியும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைத்து போட்டியாளர்களும் காலை 10:30மணி தொடக்கம் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். 11:30 மணி வரை பதிவு செய்யப்படும். போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
  • கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து விழாவில் காலதாமதம் இருக்கலாம். அனைவரும் விழா அரங்கில் இருக்க வேண்டுகிறோம். போட்டி நடக்கும் பொழுது போட்டியாளர்கள் விழா அரங்கில் இல்லாவிட்டால் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
  • விழாவிற்கு வரும் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக மதிய உணவும், மாலையில் தேநீரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • கலைநிகழ்ச்சிகளுக்குப் பிறகு பரிசளிப்பு விழா நடைபெறும். 


Comments

Popular posts from this blog

First day of School at West Windsor

Our students at the United Nations event

English Public Speaking Course