Posts

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர் குழு

Image
2018-2019ம் ஆண்டு வள்ளலார் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் குழு முந்தைய வருடங்களின் ஆசிரியர் குழு -  http://njvallalarpalli.blogspot.com/2017/10/blog-post.html

WASC Accreditation

Image
We are happy to announce that "Vallalar Tamil School, West Windsor" following the ITA Syllabus, has received Accreditation from Western Association of Schools and Colleges (WASC) -  https://www.acswasc.org Highlights of WASC Accreditation Tamil language is an ancient South Indian Language with a long history and rich literature and comprehensive grammar. The main objective of International Tamil Academy (ITA) is to teach the Tamil language to the Diaspora Children and Youth. In addition to teaching Tamil, ITA encourages Cultural activities such as music, dance, drama and any art form based on Tamil language and Tamil culture to promote Tamil and Tamil culture. ITA has a rich language program and its students not only study the language, they also learn about its history and culture. The Visiting Committee met with many parents across the US and all were in agreement that ITA’s program was engaging and met the needs of families and students. Students mentioned t...

நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா

Image
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என அனைத்து உயிர்களிடத்தும் அன்புச் செலுத்திய வள்ளலார் அவர்களின் பெயரில் நடக்கும் நியூசெர்சி வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா மிகவும் சிறப்பாக சூன் மாதம் 1ம் தேதி மேற்கு விண்ட்சர் நகரில் உள்ள தாமசு குரோவர் நடுநிலைப் பள்ளிக் கலையரங்கத்தில் நடைபெற்றது. முத்தமிழின் அரங்கேற்றம், இளமையின் கொண்டாட்டம் என இயலும், இசையும், நாடகமும் ஒன்றிணைய, மாணவர்கள் தங்கள் தமிழ்த் திறமையை வெளிப்படுத்தி தமிழ்ப் பண்பாட்டினைக் கொண்டாடினர். வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா, நண்பகல் 2:30மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பள்ளி ஆசிரியர்கள் திருமதி.தீபா, திருமதி.மதி, திருமதி.பிரேமா ஆகியோர் நிகழ்ச்சிகளை அழகுறத் தொகுத்து வழங்கினர். பள்ளியின் நிர்வாகக் குழு துணைத் தலைவர் திரு.ரமேசு தியாகராசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திருமதி.பொற்செல்வி வேந்தன் பள்ளியின் ஆண்டு அறிக்கையினை வாசித்தார். இதனைத் தொடர்ந்து இயலும், இசையும், நாடகமும் வகுப்புவாரியாக மேடையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் வளர...

நான்காம் ஆண்டு பொங்கல் விழா

Image
வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காம் ஆண்டு பொங்கல் விழா, மொழிச் சார்ந்த போட்டிகளைக் கொண்டதாக நாளை, சனிக்கிழமை, பிப்ரவரி 2ம் தேதி, நடக்க இருக்கிறது. அனைவரும் வருக.   குறள் தேனீப் போட்டி, செய்யுள் போட்டி, ஆத்திச்சூடி போட்டி, எழுத்துத் தேனீப் போட்டி, பேச்சுப் போட்டி, மழலைப் பாடல்கள் போட்டி, மாறுவேடப் போட்டி என ஏழு போட்டிகள் நடைபெற உள்ளன. விழாவிற்கு வரும் பொழுது கவனிக்க வேண்டியவை:   போட்டியாளர்கள் அனைவரும் காலையில் தங்களை மறுபடியும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைத்து போட்டியாளர்களும் காலை 10:30மணி தொடக்கம் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். 11:30 மணி வரை பதிவு செய்யப்படும். போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டியது அவசியம். கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து விழாவில் காலதாமதம் இருக்கலாம். அனைவரும் விழா அரங்கில் இருக்க வேண்டுகிறோம். போட்டி நடக்கும் பொழுது போட்டியாளர்கள் விழா அரங்கில் இல்லாவிட்டால் போட்டியில் கலந்து கொள்ள இயலாது. விழாவிற்கு வரும் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக மதிய உணவும், மாலையில் தேநீரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலையில் கலை...

கிறித்துமசு நல்வாழ்த்துகள்

Image
வள்ளலார் தமிழ்ப் பள்ளிக்கு வந்த கிறித்துமசு தாத்தா, குழந்தைகளை ஆச்சரியப்படுத்தினார். வகுப்பில் இருந்து சில புகைப்படங்கள். அனைவருக்கு இனிய கிறித்துமசு நல்வாழ்த்துகள்...

பொங்கல் போட்டிகள் - 2019

Image
வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இம் முறையும் சனவரி 12ம் தேதி, சனிக்கிழமை இந்த விழா நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு குறள் தேனீப் போட்டி , எழுத்துத் தேனீப் போட்டி , ஆத்திச்சூடி போட்டி , செய்யுள் போட்டி , பேச்சுப் போட்டி , மாறுவேடப் போட்டி , மழலைப் பாடல்கள் போட்டி போன்ற போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டி விதிமுறைகள் குறித்த விரிவான விளக்கங்களை கீழ்க்கண்ட காணெளிகளில் பார்க்க முடியும். மேலும் கேள்விகள் இருந்தால் பள்ளி தலைமையாசிரியரை தொடர்பு கொள்ளவும். பொங்கல் போட்டிகள் குறித்த அனைத்து தகவல்களும், கையேடுகளும் இந்த இணைப்பில் உள்ளது - http://njvallalarpalli.org/pongal2019 மாறுவேடப் போட்டி மழலைப் பாடல்கள் போட்டி குறள் தேனீப் போட்டி எழுத்துத் தேனீப் போட்டி ஆத்திச்சூடி போட்டி பேச்சுப் போட்டி செய்யுள் போட்டி

The President’s Volunteer Service Award for Middle School and High School students

Image
The President’s Volunteer Service Award (PVSA)  is the premier volunteer awards program, encouraging citizens to live a life of service through presidential gratitude and national recognition. More details about the award -  https://www.presidentialserviceawards.gov/the-award Vallalar Tamil School Inc is an Official Certifying Organization for “The President's Volunteer Service Award”. Middle school and high school students, who want to be part of the "President’s Volunteer Service Award" program, must be a United States citizen or a lawfully admitted permanent resident of the United States. Volunteer students are not required to be a student at Vallalar Tamil School. If you have any questions about this program, please contact the School Principal or Vice Principal.